இபோலா வைரஸ் தொற்று ஏற்படலாம் என்ற சந்தேகத்தின் பேரில் தனிமைப்படுத்தப்பட்ட உகாண்டா பெண்ணுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், அவருக்கு தொற்று இல்லை என இந்திய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும் பெங்களூரில் உள்ள தொழில்நுட்ப மையத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள குறித்த பெண், தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படுவாரா என்பது குறித்து அமைச்சு எதுவும் தெரிவிக்கவில்லை.

உகாண்டாவிலிருந்து அகமதாபாத் வழியாக வருகை அவர், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெங்களூரில் தனிமைப்படுத்தப்பட்டார்.

28 வயதான குறித்த பெண்ணுக்கு பெரிய அறிகுறிகள் இல்லாத நிலையில், லேசான உடல் வலிகள் மாத்திரமே காணப்பட்டன.

ஒருவேளை தொற்று இருப்பது உறுதியானால், 2014-க்குப் பிறகு இந்தியாவில் இதுவே முதல் பாதிப்பாக இருந்திருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

உலக சுகாதார அமைப்பு (WHO) இபோலாவை உலகளாவிய சுகாதார அவசர நிலையாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here