கொழும்பு பிரதான வீதியில் மொலகொடை பகுதியில் இன்று பிற்பகல் பல வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் ஒரு பெண் உயிரிழந்துள்ளார். 11 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கண்டியிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பஸ் ஒன்று எதிர் திசையில் வந்த இரண்டு முச்சக்கர வண்டிகள், இரண்டு வேன்கள், ஒரு லொறி மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் காயமடைந்த 12 பேர் கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில், முச்சக்கர வண்டியில் பயணித்த பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பில் பஸ் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதோடு மேலதிக விசாரணைகளை கேகாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here