மாத்தறை, கந்தர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலால்ல பகுதியில் இரண்டு பேருந்துகள் மோதிக்கொண்டதில் குறைந்தது 50 பேர் காயமடைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டநிலையில் இந்த விபத்து சம்பவித்துள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து காயமடைந்தவர்கள் மாத்தறை மற்றும் பெத்தீகம வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.








