சவூதி அரேபியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் இன்று ஏற்பட்ட இரண்டு தனித்தனி விமான விபத்துகளில் மொத்தம் 25 பேர் உயிரிழந்துள்ளனர் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

சவூதி அரேபிய அரச எண்ணெய் நிறுவனமான சவூதி அராம்கோவுக்கு சொந்தமான ஹெலிகொப்டர் ஒன்று நாட்டின் கிழக்கு கடற்கரையான ராஸ் தனுரா பகுதியில் விழுந்து நொறுங்கியுள்ளது

இந்த விபத்தில் ஹெலிகொப்டரில் பயணித்த 14 பேரும் உயிரிழந்தோடு விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை என்றும், விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் சவூதி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, பிரான்ஸின் வடகிழக்கில் உள்ள டொம்ப்லெய்ன் நகருக்கு அருகில் ஒரு சிவில் விமானம் விழுந்து நொறுங்கியதில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

விபத்துக்குள்ளான விமானம்  பரசூட் பயிற்சி பாடசாலை ஒன்றுக்கு சொந்தமானது என பிரெஞ்சு அதிகாரிகள் கூறியுள்ளனர்

உயிரிழந்தவர்களில் விமானி ஒருவரும், 5 மாணவர்கள் மற்றும் 5 பயிற்றுவிப்பாளர்கள் அடங்குவர். விபத்துக்கான காரணம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here