இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் (CPC) பெற்றோல் ஒக்டேன் 92 மற்றும் ஒட்டோ டீசல் விலைகளை இன்று ஜூன் 29 நள்ளிரவு முதல் குறைப்பதாக அறிவித்துள்ளது.

இதற்கமைய, பெற்றோல் ஒக்டேன் 92 ஒரு லீற்றரின் விலை ரூ. 20 ஆல் குறைக்கப்பட்டு ரூ. 414 ஆகவும், ஒட்டோ டீசல் விலை ரூ. 25 ஆல் குறைக்கப்பட்டு ரூ. 382 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஏனைய அனைத்து எரிபொருள் வகைகளின் விலைகளிலும் மாற்றமில்லை என கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

திருத்தியமைக்கப்பட்ட இந்த விலைகள் ஜூன் 29 நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here