கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல பகுதிகளுக்கான நீர் விநியோகம் சனிக்கிழமை (ஜூலை 04) காலை 9.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை (12 மணி நேரம்) தற்காலிகமாக இடைநிறுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு சபை (NWSDB) அறிவித்துள்ளது.

மின்சார விநியோக முறையின் முல்லேரியாவ துணை மின் நிலையத்தில் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், அது அம்பதலே நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகளை பாதிப்பதோடு, தெஹிவளை நீர் இறைக்கும் நிலையம் மற்றும் மாளிகாவத்தை நீர் இறைக்கும் நிலையத்தின் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதும் இந்த தற்காலிக தடைக்கு காரணம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதற்கமைய கொழும்பு 01 முதல் 15 வரையான பத்தரமுல்லை, பெலவத்தை, ஹொக்கந்தர, கொஸ்வத்தை, தலவத்துகொடை, ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டை, ராஜகிரிய, மிரிஹான, மடிவெல, நுகேகொடை, நாவல, கொலன்னாவ, ஐடிஎச், கொட்டிகாவத்தை, அங்கொடை, வெல்லம்பிட்டிய, ஓருகொடவத்தை, கடுவெல, மஹரகம, பொரல்லை, மற்றும் பிலியந்தல பகுதிகளில் இவ்வாறு நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

பாதிக்கப்படும் பகுதிகளில் உள்ள குடியிருப்பாளர்கள் முன்கூட்டியே போதுமான நீரை சேமித்து வைக்குமாறும், இடைநிறுத்தப்படும் காலத்தில் நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு சபை கேட்டுக் கொண்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here