நீர்கொழும்பு சிறைச்சாலையில் இரண்டு கைதிகள் குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் குறைந்தது 16 கைதிகள் காயமடைந்தனர்.
காயமடைந்த 16 கைதிகளும் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என நீர்கொழும்பு வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இந்த அமைதியின்மையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் (STF) சிறைச்சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.








