கொழும்பு கோட்டையிலிருந்து இன்று (07) மாலை 4.45 மணியளவில் ரம்பக்கனை நோக்கிப் புறப்படவிருந்த பயணிகள் ரயில், மாலை 4.50 மணியளவில் நடைமேடைக்குள் நுழையும்போது தடம் புரண்டுள்ளது.

குறித்த ரயிலின் ஒரு பெட்டி தடம் புரண்டதன் காரணமாக, கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தின் நான்கு நடைமேடைகள் முடங்கியுள்ளன.

இந்த விபத்தினால் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் மற்றும் நிலையத்திற்கு வருகை தரும் ரயில்கள் தாமதமாகலாம் என ரயில்வே அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

தடம் புரண்ட ரயில் பெட்டியை மீண்டும் தண்டவாளத்தில் ஏற்றும் பணிகள் தற்போது துரிதமாக நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயணிகளுக்கு ஏற்படும் அசௌகரியங்களைக் குறைக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக ரயில்வே அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here