டீசலுக்கு பதிலாக மண்ணெண்ணெய் பயன்படுத்தி பயணிகள் போக்குவரத்து பேருந்துகளை இயக்கிய குற்றச்சாட்டில் அம்பலாங்கொடை பொலிஸார் 4 பேருந்துகளை கைப்பற்றியுள்ளனர்.

நேற்று (7) மாலை அம்பலாங்கொடை பொலிஸின் போக்குவரத்து பிரிவு அதிகாரிகள் நடத்திய சுற்றிவளைப்பின் போதே இந்த பேருந்துகள் கைப்பற்றப்பட்டன.

கைப்பற்றப்பட்ட பேருந்துகள் காலி – கொழும்பு மற்றும் அம்பலாங்கொடை – எல்பிட்டிய வழித்தடங்களில் சேவையில் ஈடுபட்டு வந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், சில பேருந்துகள் முழுமையாக மண்ணெண்ணெயிலும், வேறு சில பேருந்துகள் மண்ணெண்ணெய் மற்றும் டீசல் கலந்தும் இயக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here