நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த சிறைச்சாலை அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சுகாதார அமைச்சின் தகவலின்படி, சிறைச்சாலை மோதலில் காயமடைந்த மேலும் 12 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்த சில நாட்களாக நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல் மற்றும் அதனைத் தொடர்ந்து நடந்த வன்முறைகளில் கைதிகள் மற்றும் சிறை அதிகாரிகள் என மொத்தம் 28 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தச் சம்பவம் குறித்து சிறைச்சாலைகள் திணைக்களம் மற்றும் உயர் மட்ட அதிகாரிகள் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here