தமிழக முதல்வர் விஜய் நடித்துள்ள அவரது இறுதிப் படமென கூறப்படும் ‘ஜனநாயகன்’, பல மாத கால தாமதத்திற்குப் பின்னர் திரைப்பட தணிக்கை குழுவின் (CBFC) அனுமதியைப் பெற்றுள்ளது.

தணிக்கைக் குழு இப்படத்திற்கு ‘A’ (பெரியவர்களுக்கு மாத்திரம்) சான்றிதழை வழங்கியுள்ளது.

தணிக்கையின் போது  “அம்பேத்கர் சட்டம்…டூ…டி.வி.கே (TVK) சட்டம்” என்ற வசனம் நீக்கப்பட்டு மாற்றப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மேலும் இந்தியக் கொடி கீழே விழுவது போன்ற காட்சிகள், குழந்தை எரிக்கப்படும் காட்சிகள் மற்றும் துணை ஆணையரின் (Deputy Commissioner) முத்திரையை அவமதிக்கும் காட்சிகள் நீக்கப்பட்டுள்ளன.

அத்துடன் “ஓம்”, “பாகவதம்”, “ரங்கநாதர்”, “தெவிடிய பையா”, “ஒத்த”, “சிலுவையில”, மற்றும் “நியூ இந்தியா” போன்ற வார்த்தைகள் நீக்கப்பட்டுள்ளன அல்லது ஒலியடக்கப்பட்டுள்ளன (Mute)

மேலும் அம்பேத்கர், சதாம் உசேனின் தூக்குத்தண்டனை மற்றும் பிற சர்ச்சைக்குரிய வசனங்கள் திருத்தப்பட்டுள்ளன அல்லது ஒலியடக்கப்பட்டுள்ளன என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வருடம் ஜனவரியில் வெளியாகவிருந்த இப்படம், பல்வேறு காரணங்களால் பிற்போடப்பட்டது.

தற்போது ஜூலை 24-ம் திகதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, எனினும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

எச். வினோத் இயக்கியுள்ள இப்படத்தில் விஜய்யுடன் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு, கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடித்துள்ளனர்.

முழுநேர அரசியலில் ஈடுபடுவதற்கு முன் விஜய் நடித்த கடைசி திரைப்படம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here