வெப்பமான காலநிலை குறித்த எச்சரிக்கை அறிவிப்பொன்றை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

இதற்கமைய கிழக்கு மாகாணம் மற்றும் முல்லைத்தீவு, வவுனியா, மொனராகலை மாவட்டங்களின் சில பகுதிகளில் நாளைய தினம் (17) பகல் நேரத்தில் மனித உடலுக்கு உணரக்கூடிய வெப்பம் (“Heat Index”) கவனம் செலுத்த வேண்டிய மட்டத்தில் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, குறித்த பகுதிகளில் உள்ள மக்கள் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது, நீண்ட நேரம் நேரடி சூரிய ஒளியில் இருப்பதை தவிர்ப்பது, இலகுவான ஆடைகளை அணிவது மற்றும் வயதானவர்கள், சிறு குழந்தைகள் மற்றும் நோயாளிகள் மீது விசேட கவனம் செலுத்துமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here