கட்டுநாயக்கவில் நேற்று முன்தினம் பிற்பகல் பொலிஸ் அதிகாரி ஒருவரை சுட்டதாக குற்றம் சாட்டப்பட்ட சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர் மினுவாங்கொட, தெவலபொலபகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர் .

முன்னதாக கட்டுநாயக்க, தேவமொட்டாவ பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒரு பொலிஸ் அதிகாரி காயமடைந்து  நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இது தொடர்பான ஆரம்பகட்ட விசாரணைகளில், குற்றம் சாட்டப்பட்ட போதைப்பொருள் கடத்தல்காரரான சந்தேகநபர் இரண்டு பொலிஸ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது காயமடைந்த அதிகாரியின் உத்தியோகபூர்வ துப்பாக்கியை பறித்து சுட்டுவிட்டு அந்த இடத்தில் இருந்து தப்பிச் சென்றமை தெரிய வந்துள்ளது.

இரகசிய தகவலின் அடிப்படையில் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த சந்தேகநபரை  இடைமறித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபரை விசாரணை செய்து கைது செய்த பின்னர்,  அதிகாரி ஒருவர் சந்தேகநபரின் மோட்டார் சைக்கிளை கொண்டு வருவதற்காக சென்றபோது, பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்ல தயாரானார்கள் என கூறப்படுகிறது.

அந்த சமயத்தில் சந்தேகநபர் மற்ற அதிகாரியின் உத்தியோகபூர்வ ஆயுதத்தை பறித்து, அவரை சுட்டுவிட்டு வேறொரு மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றார் என தெரிவிக்கப்படுகிறது.

தற்போது சந்தேகநபர் மினுவாங்கொட, தெவலபொல பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மேலதிக விசாரணைகள் தொடர்வதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here