2026 ஆம் ஆண்டிற்கான தேசிய பாடசாலைகளின் வருடாந்த மற்றும் கட்டாய ஆசிரியர் இடமாற்ற விண்ணப்பங்கள் தற்போது இணையம் மூலம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
http://nstt.moe.gov.lk என்ற இணையதளம் ஊடாக இடமாற்ற நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய ஆசிரியர்கள் 2026 ஜூலை 16 முதல் 30 வரை இணைய முறைமை வழியாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
விண்ணப்பத்தை பூர்த்தி செய்த பின்னர், அதன் அச்சுப்பிரதி ஒன்றை ஆசிரியர் சம்பளம் பெறும் பாடசாலையின் அதிபரிடம் 2026 ஜூலை 31 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் கையளிக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் விண்ணப்பங்களை நேரில் சமர்ப்பிப்பதோ அல்லது தபால் மூலம் அனுப்புவதோ கல்வி அமைச்சால் ஏற்றுக்கொள்ளப்படாது என அமைச்சு வலியுறுத்தியுள்ளது.







