ஓய்வு பெற்ற சமூக சுகாதார நிபுணர் டொக்டர் ஹர்ஷ சுரங்க பெர்னாண்டோ இன்று, புதன்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க முன்னிலையில் மத்திய மாகாணத்தின் புதிய ஆளுநராக பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.

டொக்டர் ஹர்ஷ சுரங்க பெர்னாண்டோ உலக சுகாதார நிறுவனத்தில் தடுப்பூசி நிபுணராக பணியாற்றியுள்ளார்.

அத்துடன் கண்டி மாவட்டத்தின் சமூக வைத்திய அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார்

தற்போது மத்திய மாகாணத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள அவரது பதவிப்பிரமாண விழா ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here