மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக, ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் வட்டவல ரொசெல்ல பகுதியில் பிரதான வீதியின் ஒரு பகுதி சரிந்து விழும் அபாயத்தில் உள்ளதாக நோர்வுட் பெருவீதி அலுவலகத்தின் நிறைவேற்றுப் பொறியியாளர் ஏ.எம்.சாதிக் தெரிவித்தார்.

சரிந்து விழும் அபாயம் உள்ள இடத்தில் வாகனப் போக்குவரத்து ஒரு வழிப் பாதைக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில், தற்போதைய கடுமையான சீரற்ற வானிலை காரணமாக ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் ஹட்டனில் இருந்து கித்துல்கல வரை வாகனங்களை செலுத்தும் போது கவனமாக வாகனம் செலுத்துமாறு நிறைவேற்றுப் பொறியியலாளர் சாரதிகளிடம் கேட்டுக்கொண்டார்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here