கோடிக்கணக்கான பெறுமதியான சொத்துக்கள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த 2 பெண் சந்தேக நபர்கள், அதற்கு உடந்தையாக இருந்த ஒரு ஆண் சந்தேக நபர் மற்றும் மற்றொரு பெண் சந்தேக நபர் ஆகியோர் கல்கிசை பிரிவு குற்றப் புலனாய்வு பணியகத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஜூலை மாதம் 18 ஆம் திகதி ஒரு வீட்டை உடைத்து ரூ. 14,100,000 (ஒரு கோடி நாற்பத்தி ஒரு லட்சம்) பெறுமதியான தங்க நகைகளை கொள்ளையிட்ட குற்றம் தொடர்பில் ஆரம்பிக்கப்பட்ட விசாரணையின் பின்னர் இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி நேற்று (6) தெஹிவளை பகுதியில் இந்த குற்றத்துடன் தொடர்புடைய 2 பெண் சந்தேக நபர்களும், ஹட்டன் பத்தனை பகுதியில் அதற்கு உடந்தையாக இருந்த ஒரு ஆண் சந்தேக நபரும் மற்றும் ஒரு பெண் சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அங்கு திருடப்பட்ட 8 ஜோடி தங்க காதணிகள், 4 தங்க பென்டன்கள், 1 மோதிரம், 10 தங்க சங்கிலிகள், 1 கைக்காப்பு, 2 தங்க மோதிரங்கள் உள்ளிட்ட பல பொருட்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டு கல்கிசை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
சந்தேக நபர்களான பெண்கள் 28, 46, 53 வயதுடையவர்களும், 28 வயதுடைய ஆண் சந்தேக நபரும் ஹட்டன் பத்தனை பகுதியைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கல்கிசை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.








