குழந்தைகளை புறக்கணித்தல், கைவிடுதல் மற்றும் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் துன்புறுத்துதல் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவிக்கிறது.

அதன் சட்ட அமுலாக்க பணிப்பாளர் சட்டத்தரணி சஜீவனி அபேகோன் இது குறித்து கூறுகையில், ஒரு மாதத்திற்கு 600 முதல் 1,000 வரையிலான முறைப்பாடுகள் கிடைக்கின்றன என்றார்.

இது போன்ற குற்றங்களில் ஈடுபடும் பெற்றோர்களுக்கு, தண்டனைச் சட்டக் கோவையின் படி 2 வருடங்களுக்கு மேல் 10 வருடங்களுக்கு குறைவான சிறைத்தண்டனை விதிக்க முடியும் என்றும் சட்டத்தரணி சஜீவனி அபேகோன் தெரிவித்தார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here