நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

மாத்தளை மாவட்ட பிராந்திய அரசியல் அதிகார சபையுடனான சந்திப்பு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று முன்தினம் (25) மாத்தளை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

இக் கூட்டத்தில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

“இந்தப் பொருளாதார முறையை மாற்ற வேண்டும், இல்லையெனில் இன்னும் 5-6 வருடங்களில் இந்தப் பொருளாதார பிரச்சினைகள் அதிகரித்து இந்த முறை போலல்லாமல் மக்களை கடுமையாகப் பாதிக்கும். பெட்ரோல் இல்லை, எதுவும் இல்லை. அடுத்த முறை ஐ.எம்.எஃப் க்கு போனால் எமது நிலைமைகள் தெரியும். எனது அடுத்த பயிற்சி புதிய பொருளாதாரத்தை உருவாக்குவதாகும். இந்த நாட்டின் அடுத்த தலைமுறைக்கு எதிர்காலம் வழங்கப்பட வேண்டும். உங்களுக்காக அல்ல உங்கள் குழந்தைகளுக்காக இதைச் செய்வோம். எப்படி ஆட்சியைப் பிடிக்கலாம் என்று எதிர்க்கட்சிகள் பார்க்கின்றன. அதிகாரத்தைப் பெறுவதற்கான சிறந்த வழி எங்களுடன் இணைவதே என்று அவர்களுக்குச் சொல்கிறேன். எங்களிடமிருந்து அனுபவத்தைப் பெறுவதற்கும் பின்னர் அதிகாரத்தைப் பெறுவதற்கும் நாம் அனைவரும் ஒன்றாக இந்தப் பயணத்தை மேற்கொள்வோம்.” என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here