இந்தியாவில் நாளை ஆரம்பமாகவுள்ள இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு எதிரான T20 தொடருக்கு பின்னர் ஆப்கானிஸ்தான் அணி இலங்கைக்கு எதிராக மூன்று வகையான போட்டி தொடர்களில் விளையாடுவதற்காக இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது.

இத்  தொடர்களுக்கான அட்டவணைகள் வெளியாகியுள்ளன.

இதற்கமைய முதலாவதாக இரு அணிகளும் பெப்ரவரி 2 ஆம் திகதி கொழும்பு SSC மைதானத்தில் தொடங்கும் ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளது.

அதனைத் தொடர்ந்து, பெப்ரவரி 09, 11, 14 ஆம் திகதிகளில் மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதவுள்ளன.

இப்போட்டிகளும் கொழும்பு SSC மைதானத்தில் நடைபெற்றவுள்ளன.

பின்னர், பெப்ரவரி 17, 19, 21 ஆம் திகதிகளில் தம்புள்ளையில் இரு அணிகளுக்கும் இடையிலான T20 போட்டி தொடர் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை சுற்றுப்பயணத்தை முடித்துகொண்ட ஆப்கானிஸ்தான் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு (UAE) சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளது.

அங்கு அயர்லாந்து அணியுடன் ஒரு டெஸ்ட் போட்டி, மூன்று ஒருநாள் போட்டி மற்றும் மூன்று T20 போட்டிகளைக் கொண்ட தொடர்களிலும் விளையாடவுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here