இலங்கையில்  கடந்த ஆண்டில் பல்வேறு மனித நடவடிக்கைகள் காரணமாக 474 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதாகவும், சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின் கம்பிகள் காரணமாக 50 யானைகள் உயிரிழந்துள்ளதாகவும் இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

மேலும், இலங்கையில் சுமார் 6 ஆயிரம் காட்டு யானைகள் இருப்பதாக தரவுகள் சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன், யானைகளை கொல்ல சட்டவிரோதமாக முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் தொடர்பிலும் வேலிகள் அல்லது கம்பிகளுக்கு அனுமதியின்றி மின்சாரம் வழங்கப்படுவது தொடர்பிலும் 1987 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தின் ஊடாக இலங்கை மின்சார சபைக்கு உடனடியாக அறிவிக்குமாறும் மக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here