ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக இன்று வெள்ளிக்கிழமை (24.05.2024) யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளார்.

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் விசேட உலங்கு வானுர்தியில் பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் தரையிறங்கினார்.

ஜனாதிபதியை வரவேற்க கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் உள்ளிட்ட குழுவினர் சென்றிருந்தனர்.

வடக்கு மாகாணத்திற்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் செய்திருக்கும்  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் வவுனியா மாவட்டங்களுக்கு செல்லவுள்ளார்.

ஜனாதிபதி குறித்த விஜயத்தின் போது “உரித்து தேசிய வேலைத்திட்டம்”-இன் கீழ் காணி உரிமங்களை வழங்கி வைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் பத்து முக்கியநிகழ்வுகளில் கலந்து கொள்ளவுள்ள ஜனாதிபதி வடக்கு மாகாணத்தில் உள்ள  இளைஞர்களுடன் விசேட சந்திப்பையும் மேற்கொள்ளவுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here