மின்சாரக் கட்டணத்தை 10 முதல் 20 வீதம் வரை குறைப்பதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

மின்சார சபையை மறுசீரமைத்தால் மின்சாரம் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் எனவும் பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் தனுஷ்க பராக்கிரமசிங்க நேற்று தெரிவித்துள்ளார்.

இவ்வாண்டின் இரண்டாவது மின் கட்டண திருத்த பிரேரணை ஜூலை 01ஆம் திகதி மின்சார சபை மற்றும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படவுள்ள மறுசீரமைப்பு சட்டத்தின் மூலம் மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கு தேவையான ஏற்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவித்தார்.

மேலும், மின்சார சபையின் தற்போதைய நிர்வாகம் ஏற்கனவே வெளிநாட்டு நிறுவனங்களின் தேவைக்கேற்ப செயற்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here