ஜனாதிபதித் தேர்தலில் ஒரு தமிழ் பொது வேட்பாளரை நிறுத்துவதற்காக உழைத்துக் கொண்டிருக்கும் மக்கள் அமைப்பாகிய, தமிழ் மக்கள் பொதுச்சபையானது,நேற்று பதினாறாம் திகதி காலை 9:30 மணியிலிருந்து 12.30 மணி வரை பொதுக்கூட்டத்தை நடத்தியது .

இக் கூட்டம் கிளிநொச்சி , கூட்டுறவு மண்டபத்தில் நடைபெற்றது.

சுமார் 200க்கும் குறையாத வெவ்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் இதில் பங்கு பற்றினார்கள்.

விவசாய அமைப்புகள், கூட்டுறவு அமைப்புகள், அரச சார்பற்ற நிறுவனங்கள், வர்த்தக அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு வகைப்பட்ட அமைப்புகளும் இதில் கலந்து கொண்டன.

தமிழ் மக்கள் பொதுச்சபை சார்பில் நிலாந்தன், பேராசிரியர் கணேசலிங்கம், ஜோதிலிங்கம், ரவீந்திரன் இந்திரன் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

அங்கு கலந்து கொண்டவர்கள் பெருமளவு கேள்விகளை கேட்டார்கள்.

முடிவில் , எல்லா அமைப்புகளும் பொதுத்தமிழ் வேட்பாளரை ஏற்றுக் கொள்வதாக பகிரங்கமாக அறிவித்தன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here