ஹொரனை, வகவத்த, கொபவகவத்த பகுதிகளில் களு கங்கை ஆற்றை அண்டிய பகுதியில் இடம்பெற்று வந்த சட்டவிரோத மணி மற்றும் மணல் அகழ்வு நடவடிக்கைகளை வலான ஊழல் எதிர்ப்பு பிரிவு அதிகாரிகள் குழு ஒன்று சுற்றிவளைத்துள்ளது.

சுற்றிவளைப்பின் போது சட்டவிரோத செயலில் ஈடுபட்ட 25 பேர் கைது செய்யப்பட்டனர்.

அத்துடன் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்ட 14 படகுகள் மற்றும் மணி அகழ்வுக்கு பயன்படுத்திய இயந்திரங்கள் உட்பட பல உபகரணங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன.

கைது செய்யப்பட்டவர்கள் 30-40 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும், ஹொரனை மற்றும் அதை அண்டிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸ்மா அதிபருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், வலான ஊழல் எதிர்ப்பு பிரிவின் பணிப்பாளர் ரொஹான் ஒலுகலவின் ஆலோசனையின் பேரில் இந்த விசேட சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here