நீதிமன்ற நடவடிக்கைகளை மேலும் திறமையானதாகவும் ஒழுங்கானதாகவும் மாற்றும் நோக்கில், அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள நீதிபதிகளின் ஓய்வு வயதை அதிகரிக்கும் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை சர்ச்சைக்குரிய விடயமாக மாறியுள்ள நிலையில் அனைத்து மாற்றங்களும் நீதித்துறையின் சுதந்திரத்தை பாதுகாத்தவாறு அமுல்படுத்தப்படும் என அரசு வலியுறுத்தியுள்ளது.

நீதிமன்றங்களின் எண்ணிக்கையை அதிகரித்தல், அனுபவமிக்க நீதிபதிகளின் சேவை காலத்தை நீடிப்பதன் மூலம், அவர்களின் நிபுணத்துவத்தை நீதிமன்றங்களுக்கு அளிப்பது, மேலும் அதிக வழக்குகளால் ஏற்படும் தாமதங்களை குறைத்தல் உள்ளிட்டவற்றை எதிர்பார்ப்பதாக  அரசாங்கம் தெரிவித்துள்ளது.

மேலும் மேன்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்கள்  இரண்டிலும் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தையும் இந்த திட்டம் சுட்டிக்காட்டுகிறது.

குறிப்பாக, குற்றவியல் அதிகாரம் கொண்ட மாகாண உயர் நீதிமன்றங்கள் மற்றும் சிவில் மேன்முறையீட்டு உயர் நீதிமன்றங்கள் அதிகளவான வழக்குகளால் சிரமப்படுவதால், தீர்வுகளை விரைவுபடுத்த மேலதிக நியமனங்கள் கோரப்பட்டுள்ளன.

நீதி அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்ட இந்த சீர்திருத்தங்களின் படி, அரசியலமைப்பு மற்றும் 1978 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க நீதித்துறை சட்டத்தை திருத்துவதற்கான வரைவு சட்டத்தை தயாரிப்போருக்கு பணிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here