இலங்கைக்கு எதிர்வரும் 20ஆம் திகதி விஜயம் மேற்கொள்ளும் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி.சுப்ரமணியம் ஜெய்சங்கர்,ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்த்தன, வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி ஆகியோரைச் சந்திக்கவுள்ளார்.

அதனைத்தொடர்ந்து எதிர்க்கட்சித்தலைவர் சஜித்பிரேமதாச, வடக்கு,கிழக்கு தமிழ்க் கட்சிகளின் தலைவர்களையும்,மலையகக் கட்சிகளின் தலைவர்களையும் மற்றும் முஸ்லிம் கட்சிகளின் பிரதிநிதிகளையும் சந்திக்கவுள்ளார்.

இந்த விஜயத்தின் போது, இலங்கையில் இந்தியாவின் முதலீடுகள் மற்றும் இருதரப்பு உறவுகள் உட்பட பரஸ்பர ஒத்துழைப்புக்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படவுள்ளதாக இந்தியவெளிவிவகார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here