Saturday, May 2, 2026
No menu items!

விஜயம்

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க ஐ.நா. பொதுச்செயலாளருடன் சந்திப்பு!

ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்ளும் வகையில், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க நியூயோர்க் நகரிற்கு விஜயம் செய்துள்ளார். இந்த விஜயத்தின் போது, நேற்று (செப்டம்பர் 25) ஜனாதிபதியும், ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸும் இடையே முக்கிய சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. இந்த சந்திப்பு, நியூயோர்க் நகரில் உள்ள ஐக்கிய...

அமெரிக்கா–ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய இரு நாடுகளுக்கும் விஜயம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் 22 ஆம் திகதி ஜனாதிபதி அநுர அமெரிக்காவிற்கு விஜயம் செய்ய உள்ளார். ஐக்கிய நாடுகள் பொதுச் சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக அவர் இவ்வாறு அமெரிக்காவிற்கு விஜயம் செய்ய உள்ளார். இந்த விஜயத்தின் போது ஐக்கிய நாடுகள் அமைப்பின்...

இலங்கை – இந்திய பாராளுமன்ற நட்புறவு சங்கத் தூதுக் குழுவினர் இந்தியா விஜயம்!

சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சரும், இலங்கை – இந்திய பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவருமான அமைச்சர் (வைத்தியர்) நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையிலான இலங்கை பாராளுமன்றத் தூதுக் குழுவினர், இந்திய உயர்ஸ்தானிகரகத்தின் அழைப்பை ஏற்று ஆகஸ்ட் 26 முதல் 30 வரை இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர். இக்குழுவில் துணை அமைச்சர்கள், பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த பாராளுமன்ற...

மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்திற்கு விஜயம் செய்த பிரதமர்!

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்திற்கு சென்று வழிபாட்டில் ஈடுபட்டார். மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய மகா கும்பாபிசேகம் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்ற நிலையில் இன்று நண்பகல் பிரதமர் ஆலயத்திற்கு சென்று வழிபாட்டில் ஈடுபட்டார். இதனிடையே பிரதமரின் வருகையை முன்னிட்டு அந்தப் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.      

மீண்டும் வலுவடைந்துள்ள இலங்கை – இந்திய உறவு!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தை அடுத்து, இரண்டு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் மீண்டும் உறுதியாகி இருப்பதாக இந்திய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. இரண்டு நாடுகளுக்கும் இடையிலான மூலோபாய நம்பிக்கை, உடன்பாடுகள் மற்றும் தீர்க்கப்படாதுள்ள பல விடயங்களுக்கான தீர்வுகளைக் காணுதல் போன்ற விடயங்கள், புதிதாகப் பலப்படுத்தப்பட்டுள்ளன. ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாகப் பதவியேற்றதை அடுத்து,...

மாலைதீவு வெளியுறவு அமைச்சர்  இலங்கைக்கு விஜயம்!

மாலைதீவு வெளியுறவு அமைச்சர் அப்துல்லா கலீல் இலங்கைக்கு அதிகாரப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார். இந்த விஜயத்தின் போது, ​​மாலைதீவு வெளியுறவு அமைச்சர் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய ஆகியோரை மரியாதை நிமித்தமாக சந்திக்க உள்ளார். கலீல், வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத்துடன் இருதரப்பு கலந்துரையாடல்களையும் நடத்துவார். அவருடன் மாலத்தீவின் வெளியுறவுச் செயலாளர் பாத்திமத் இனயாவும்...

உலக அரசுகளுக்கு இடையிலான உச்சி மாநாட்டில் உரையாற்றவுள்ள ஜனாதிபதி!

டுபாயில் நடைபெறும் உலக அரசுகளுக்கு இடையிலான உச்சி மாநாட்டில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று பிற்பகல் உரையாற்றவுள்ளார். எதிர்கால அரசாங்கங்களை வடிவமைத்தல் என்ற கருப்பொருளின் கீழ் இந்த ஆண்டு நடைபெறும் மாநாட்டின் போது, ஜனாதிபதி பல மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த இருதரப்பு சந்திப்புகளில் பங்கேற்றுள்ளார். அத்துடன் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார...

வட மாகாண தொழில் கோரும் பட்டதாரிகள் போராட்டம் !

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதியின் கவனத்தை ஈர்க்கும் நோக்கத்துடன் வட மாகாண தொழில் கோரும் பட்டதாரிகள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள இன்றைய தினம் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். மாவட்ட செயலகத்தில் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ஜனாதிபதி கலந்து கொண்டிருந்த வேளை, தொழில்...

சீனாவுக்கு விஜயம் செய்யும் ஜனாதிபதி!

சீனாவுக்கான நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (13) பிற்பகல் நாட்டிலிருந்து பயணமாகிறார். சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கின்(Xi Jinping) அழைப்பின் பேரில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நாளை (14) முதல் 17 ஆம் திகதி வரை சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்கிறார். இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி அநுர...

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு விஜயம் செய்த விஜித ஹேரத்!

அமைச்சர் விஜித ஹேரத் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு (BIA) விஜயம் செய்து இலங்கை விமானங்களின் தாமதம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை ஆராய்வதற்காக சென்றுள்ளார். இந்த விஜயத்தின் போது விமான நிலையத்தின் பல்வேறு பகுதிகளுக்கு விஜயம் செய்த அமைச்சர் அங்கு பணிபுரியும் ஊழியர்களுடன் சிநேகபூர்வ கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார். 24 மணித்தியாலங்களும் சேவையில் ஈடுபடும் போது பயணிகளுக்கு...
- Advertisement -spot_img

Latest News

ஹட்டன்-டயகம வீதியில் பேருந்து விபத்து; ஒருவர் உயிரிழப்பு 34 பேருக்கு காயம்

ஹட்டன்-டயகம வீதியில், மற்றொரு வாகனத்திற்கு வழிவிட முயன்ற பேருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த அனர்த்தத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்ததோடு, 2 சிறு குழந்தைகள் உட்பட 34...
- Advertisement -spot_img