அடையாளந்தெரியாதவர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்கான இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் கடந்த 06 ஆம் திகதி டொராண்டோ ஸ்கார்பரோ பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் இடம்பெற்றுள்ளது.

துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்கான அவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதையடுத்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணம் மீசாலையைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞன் ஒருவரே இவ்வாறு துப்பாக்கிய பிரயோகத்திற்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

வியாபாரப் போட்டியில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக அவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here