பஸ்ஸில்  பயணித்த  27 வயதுடைய யுவதியின் கூந்தலை  வெட்டியதாக கூறப்படும் முருத்தலாவ பிரதேச பள்ளி ஒன்றைச் சேர்ந்த மௌலவி என சந்தேகிக்கப்படும்  ஒருவரை கண்டி தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த யுவதி கட்டுகஸ்தோட்டையில் இருந்து கண்டி நோக்கி பயணித்த  பஸ்ஸில்  அமர்ந்திருந்த போது சந்தேகநபர் அந்த ஆசனத்தின் பின் இருக்கையில் அமர்ந்து கூந்தலை வெட்டியதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

அதேநேரம் சம்பவத்தை எதிர்கொண்ட யுவதி, குறித்த சந்தேகநபரையும்,    அவர் வெட்டிய கூந்தலையும்  தனது கையடக்கத் தொலைபேசியில் காணொளியாக  பதிவு செய்துள்ளார் .

மேலும், சம்பவத்தின் போது  பஸ்ஸில் பயணித்த  பயணிகள் சந்தேக நபரை பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இந்நிலையில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here