பூநகரி கௌதாரிமுனை வினாசி ஓடை கிராமத்தில் நேற்றுமுந்தினம் நவீன இறால் பண்ணை கௌரவ அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
1000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் Ceylon sea food farm நிறுவனத்தினால் 25 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த இறால் பண்ணையின் முதற்கட்ட பணிகளுக்காக இதுவரை 500 மில்லியன் ரூபா செலவிடப்பட்டிருப்பதாக இப் பண்ணையின் பங்குரிமையாளரில் ஒருவர் தெரிவித்தார்.
இது போன்ற வேறு சில பண்ணைகளை இதே கிராமத்தில் அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும் சில உள்ளுர் முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டாதிருப்பதை விடுத்து இதற்கான முயற்சிகளை தொடர முன்வர வேண்டும் என நிகழ்வுக்கு தலைமையேற்று உரையாற்றிய கௌரவ அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கேட்டுக் கொண்டார்.
பண்ணை முதலீட்டாளர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இச் சந்திப்பில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நெக்டா நிறுவன உத்தியோகத்தர்கள், கிராம சேவகர் மற்றும் அங்கு பணியாற்றும் உள்ளூர் தொழிலாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.








