சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன உள்ளிட்ட சுகாதார அமைச்சின் அதிகாரிகள் அடங்கிய குழு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு இன்று விஐயம் செய்தனர்.

அமைச்சர் வைத்திய சாலை வளாகத்தில் மரக்கன்றையும் நாட்டி வைத்தார்.

அத்தோடு விடுதிகள் சத்திரசிகிச்சை பிரிவுகளையும் பார்வையிட்டதோடு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அரும்பொருட் காட்சியகத்தையும் பார்வையிட்டார்.

பின் குருதி மாற்று சிகிச்சைக்கான உபகரணம் ஒன்றையும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு வழங்கி வைத்தார்.

அமைச்சரின் இந்த விஐயத்தின் போது சுகாதார அமைச்சின் செயலாளர் RD.P.G.மகிபால மற்றும் Dr.அசேல குணவர்த்தன பாராளுமன்ற உறுப்பினர்களான அங்கயன் இராமநாதன், தர்மலிங்கம் சித்தார்தன், யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி  வைத்தியசாலையின் அதிகாரிகள் பணியாளர்கள் எனப்பலரும் இதில் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here