Thursday, July 23, 2026
No menu items!

போதனா வைத்தியசாலை

பாடசாலை மாணவர்களிடையே புகைபிடிப்பு அதிகரிப்பு – சுவாச நோய் நிபுணர் எச்சரிக்கை!

பாடசாலை மாணவர்களிடையே புகைபிடிக்கும் பழக்கம் அதிகரித்து வருவதாக பேராதனை போதனா வைத்தியசாலையின் சுவாச நோய் விசேட வைத்தியர் துமிந்த யசரத்ன தெரிவித்துள்ளார். சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில், 14 மற்றும் 15 வயதிற்குட்பட்ட பல மாணவர்கள் சிகரெட்டுகளை ‘பரிசோதித்துப்’ பார்க்க முயற்சிப்பது...

யாழ்ப்பாணத்தில் கத்திக்குத்து தாக்குதல் – ஒருவர் உயிரிழப்பு, நால்வர் காயம்!

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கத்திக்குத்தில் ஒருவர் உயிரிழந்தார். புங்குடுதீவு முதலாம் வட்டாரத்தை சேர்ந்த 46 வயதான நபரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த நபர் மீது கத்திக்குத்து தாக்குதலை நடத்திய நபரை பிடிக்க முயன்ற இரு பெண்கள் உள்ளிட்ட நால்வர் காயமடைந்த நிலையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மலேரியா நோயாளர்கள் எண்ணிக்கையில் அதிகரிப்பு – யாழில் 2 பேர் பாதிப்பு!

இலங்கையில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 5 பேருக்கு மலேரியா நோய் தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். அவர் இன்று விடுத்துள்ள ஊடக அறிக்கை ஒன்றிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களில் யாழ்ப்பாண மாவட்டத்தில் 2 பேர் மலேரியா தொற்றுடன் இனங்காணப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஆபிரிக்காவிலிருந்து நாடு...

மட்டக்களப்பில் மூதாட்டியிடம் ரூ.3 இலட்சம் பெறுமதியான தங்கச் சங்கிலி பறிப்பு!

மட்டக்களப்பு நல்லையா வீதியில் நேற்று (24) காலை இடம்பெற்ற வன்முறையுடனான தங்கச் சங்கிலி பறிப்பு சம்பவத்தில், 78 வயதுடைய வயோதிபப் பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். அந்தப் பெண் தனது வீட்டின் முற்றத்தில் சுத்தம் செய்துக் கொண்டிருந்த வேளையில், மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், அவரது கழுத்தில் இருந்த ரூ.3 இலட்சம் பெறுமதியான தங்கச் சங்கிலியை பறித்து,...

யாழில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறு –  கூரிய ஆயுதத்தால் நபரொருவர் மீது தாக்குதல்!

கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நந்தாவில் அம்மன் ஆலயத்திற்கு அருகாமையில் நேற்றைய தினம் (23.07) இடம்பெற்ற தாக்குதலில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், மதுபோதையில் இருந்த இருவருக்கிடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டு அது கைகலப்பாக மாறியது. இந்நிலையில் கூரிய ஆயுதத்தால் குறித்த நபர் மீது தாக்குதல் நடாத்திவிட்டு சந்தேகநபர் தப்பிச்...

மட்டக்களப்பு கருவப்பங்கேணியில் ரயில் மோதியதில் 23 வயது இளைஞன் உயிரிழப்பு!

மட்டக்களப்பு கருவப்பங்கேணி பகுதியில்  ரயில் மோதியதில் 23 வயதுடைய இளைஞன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை (8) அதிகாலையில்  இடம்பெற்றுள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர். கருவப்பங்கேணி பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய சுந்தரராஜா நிசாந்தன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பு கருவப்பங்கேணி பகுதியில் சம்பவதினமான இன்று அதிகாலை 1.30 மணியளவில் ரயில் தண்டவாளத்தில் இருந்துள்ள...

யாழில் இரத்த வாந்தி எடுத்து குடும்பஸ்தர் ஒருவர் மரணம்!

யாழில் இரத்த வாந்தி எடுத்த குடும்பஸ்தர் ஒருவர் நேற்று (20) உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் - கொழும்புத்துறை பகுதியைச் சேர்ந்த 42 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த நபர் மது மற்றும் புகை பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார். இந்நிலையில் நேற்று அதிகாலை 4 மணியளவில் உடல் சுகயீனம் ஏற்பட்டு இரத்த வாந்தி எடுத்துள்ளார். பின்னர் காலை 5 மணிக்கு...

யாழ்ப்பாணத்தில் வெற்று கைகளால் நாக பாம்பினை பிடித்த குருக்கள் உயிரிழப்பு!

யாழ்ப்பாணத்தில் வெற்று கைகளால் நாக பாம்பினை பிடித்து, பாம்பினை காப்பாற்ற முயன்றவர் பாம்பு தீண்டியதில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். புத்தூர், சிவன் கோவில் வீதியைச் சேர்ந்த கணேசக்குருக்கள் கௌரிதாசன் சர்மா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கடந்த திங்கட்கிழமை இரவு, இவரது வீட்டின் முற்றத்தில் காணப்பட்ட வலைகளுக்குள் நாக பாம்பு ஒன்று சிக்கி தவித்துக்கொண்டிருந்தது. இதனை அவதானித்த அவர், வலைகளுக்குள்...

வீடொன்றின் மீது வீசப்பட்ட பெற்றோல் குண்டினால் சிறுவன் பலி!

களுத்துறை, ரஜவத்தை, கமகொட பகுதியிலுள்ள வீடொன்றின் மீது வீசப்பட்டதாகக் கூறப்படும் பெற்றோல் குண்டினால் தீக்காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (30) இரவு ரஜவத்த - கமகொட வீதி பகுதியிலுள்ள வீடொன்றுக்கு உந்துருளியில் வந்த இருவர், பெற்றோல் நிரப்பிய போத்தலை வீசிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இதனால் 28 வயதுடைய பெண்ணும் 06 வயதுடைய...

அளவுக்கு அதிகமான மாத்திரைகளை உட்கொண்ட பெண் உயிரிழப்பு!

அளவுக்கு அதிகமான மாத்திரைகளை உட்கொண்ட பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பு சேற்றுக்குடா பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயே இவ்வாறு தனது நேய்க்கான மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக உட்கொண்டதால் மரணமடைந்துள்ளார். வழமை போன்று புதன்கிழமை (26) இரவு உணவு உட்கொண்டு விட்டு நோய்கான மாத்திரைகளையும் உட்கொண்டு குறித்த பெண் உறங்கச் சென்றுள்ளார். வியாழக்கிழமை (27) அதிகாலை...
- Advertisement -spot_img

Latest News

ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை 100 டொலரை தாண்டியது

ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை அமெரிக்க டொலர் 100ஐ தாண்டியுள்ளது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பரவி வரும் மோதல்கள் காரணமாக உலகளாவிய எண்ணெய் விநியோகம் மேலும்...
- Advertisement -spot_img