அச்சுவேலி பத்தமேனி ஶ்ரீ வட பத்திரகாளி அம்பாள் தேவஸ்தானத்தின் வருடாந்த மஹோற்சவத்தில் நேற்றைய தினம் இரதோற்சவம் இடம்பெற்றது.

வசந்த மண்டப பூசையை தொடர்ந்து காலை 11 மணியளவில் அம்பாள் இரதத்தில் எழுந்தருளினார்.

இதன்போது பெருமளவு பக்தர்கள் பங்கேற்றதுடன் அங்கப்பிரதட்சணம் மற்றும் நேர்த்திக்கடன்களை நிறைவேற்றினர்.

ஆலய மஹோற்சவம் கடந்த 11ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி இன்று  தீர்த்தோற்சவத்துடன் நிறைவுக்கு வந்தது. என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here