திருகோணமலை – தம்பலகாமம் பகுதியில் எரிந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தம்பலகாமம் – கூட்டாம்புளி பகுதியில் சடலம் காணப்படுவதாக அப்பகுதி விவசாயிகள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் குறித்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சடலத்துக்கு அருகே அடையாள அட்டை ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில் உயிரிழந்த நபர் தம்பலகாமத்தைச் சேர்ந்த அன்புவழிபுரத்தில் திருமணம் முடித்தவர் என்பதோடு சமீப காலமாக பிரான்ஸ் நாட்டில் வசித்து வந்துள்ளார், அத்துடன் திருமண நிகழ்வொன்றுக்காக சில நாட்களுக்கு முன்னர் சொந்த மண்ணுக்கு வந்திருந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளார் என்பதும் தெரிய வருகிறது.

மேலும், குறித்த சடலம் பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை தம்பலகாமம் பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here