Friday, April 24, 2026
No menu items!

அச்சுவேலி

யாழில் போதை மாத்திரைகளுடன் மாணவர்கள் கைது!

யாழ்ப்பாண மாவட்ட போதை தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், கொழும்பில் உள்ள பிரபல பாடசாலை மாணவன் மற்றும் யாழ்ப்பாணம் ஊரெழு பகுதியை சேர்ந்த மாணவர் ஒருவர், போதை மாத்திரைகள் வைத்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர். வெளிமாவட்ட பேருந்து நிலையத்தில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய இருவரையும் பொலிஸார் தடுத்து விசாரணை நடத்தினர். சோதனை மேற்கொள்ளும்...

கிருமித் தொற்று காரணமாக 16 வயது மாணவி பலி..!!

இன்று அதிகாலை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.  அச்சுவேலி சரஸ்வதி மகா வித்தியாலயத்தில் தரம் 11இல் கல்வி பயிலும் சந்திரானந்தன் வர்ணயா (வயது 16) என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரிவிக்கையில், குறித்த மாணவிக்கு காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் கடந்த மாதம் 5-ம் திகதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக...

யாழில் கிணற்றில் விழுந்து சிறுவன் பரிதாபமாக உயிரிழப்பு!

அச்சுவேலி தோப்பு பகுதியில் நேற்று மாலை (26) கிணற்றில் விழுந்து சிறுவன் ஒருவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அச்சுவேலி தோப்பு பகுதியில் பேரனுடன் தோட்டத்திற்கு நீர் இறைப்பதற்கு சென்ற வேளை பேரன் நீரை இறைத்து கொண்டிருந்த சந்தர்ப்பத்தில்  வளர்ப்பு மீன் பிடிப்பதற்காக வாளியை கயிற்றுடன்  கிணற்றில் இறக்கிய போது கால் தடுமாறிய நிலையில் சிறுவன் கிணற்றுக்குள் விழுந்துள்ளான். கிணற்றில்...

அச்சுவேலி விவசாயிகள் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனுடன் கலந்துரையாடல்!

அச்சுவேலி, பத்தைமேனி விவசாயிகள் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவது தொடர்பாக  பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அவர்களுக்கு எடுத்துரைக்கும் கலந்துரையாடல் ஒன்றை நேற்று (15) பத்தைமேனி பொது நோக்கு மண்டபத்தில் ஒழுங்கு செய்திருந்தனர். இதன் போது விவசாயிகள் கடந்த காலத்தில் தமக்கு  உரமானியம், விவசாய உள்ளீடுகளுக்கான மானியம் போன்றவை வழங்கப்பட்டது. ஆனால் இன்று எதுவகையான மானியங்களும் வழங்கப்படுவதில்லை. அத்துடன்...

யாழில் கடை உரிமையாளர் மீது இனந்தெரியாத கும்பல் சரமாரி தாக்குதல்..!

அச்சுவேலியில் இன்று காலை இனந்தெரியாத கும்பலொன்று நடத்திய தாக்குதலில் கடை உரிமையாளர் ஒருவர் பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளார். இன்று அதிகாலை 6.15 மணியளவில் அச்சுவேலி வைத்தியசாலை வீதியூடாக தனது கடையினைத் திறப்பதற்கு சென்ற வேளை இடைவழியில் மறித்த இனந்தெரியாத கும்பல் கடை உரிமையாளர் மீது கடுமையாக தாக்குதல் நடாத்தியுள்ளனர். குறித்த வீதியில் கார் ஒன்றில் காத்திருந்த இனந்தெரியாதோர் கடைக்குச்...

யாழில் அழகு சாதன விற்பனை நிலையத்தில் தீ விபத்து..!

மின் ஒழுக்கு காரணமாக யாழ்ப்பாணம் அச்சுவேலி நகரப் பகுதியில் உள்ள அழகு சாதன விற்பனை நிலையம் நேற்று மாலை பகுதியளவில் எரிந்து சேதமானது. விற்பனை நிலையத்தை பூட்டுவதற்கு உரிமையாளர் முயற்சி செய்த பொழுது, திடீரென விற்பனை நிலையத்தின் பின்பகுதியில் ஏற்பட்ட மின்னொழுக்கு வேகமாக பரவியது. புகை வருவதை கண்ணுற்ற அயல் கடை உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து...

34 ஆண்டுகளுக்குப் பின்னர் நிபந்தனைகளுடன் திறக்கப்பட்ட யாழ் – பலாலி வீதி..!

அச்சுவேலியில் இருந்து பருத்தித்துறை கடற்கரை நோக்கிச் செல்கின்ற அதி உயர் பாதுகாப்பு வலயத்தில் இருந்த வீதி இன்று காலை 6 மணியளவில் திறந்து வைக்கப்பட்டது. அந்த வீதியில் பயணிப்பதற்கு பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பலாலி அதி உயர் பாதுகாப்பு வலயத்தினுள் அமைந்துள்ள இராணுவக் குடியிருப்பினூடாகச் செல்லும் இந்த வீதியில், பயணிக்கும் அனைவரும் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுதல் வேண்டும்...

கைத்தொழில்பேட்டைக்கு கண்காணிப்பு பயணம் மேற்கொண்ட ஆளுநர்..!

அச்சுவேலியில் அமைந்துள்ள கைத்தொழில்பேட்டைக்கு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் வியாழக்கிழமை (27.02.2025) கண்காணிப்பு பயணம் மேற்கொண்டார். கைத்தொழில்பேட்டையில் இயங்கும் தொழிற்சாலைகளையும் சென்று பார்வையிட்டதுடன் அங்குள்ள தேவைப்பாடுகள் தொடர்பிலும் ஆராய்ந்தார். நீர் விநியோகம் இன்மை மற்றும் முன்னறிவித்தல் இல்லாத மின்தடை காரணமாக பாதிக்கப்படுவதாகச் சுட்டிக்காட்டப்பட்டது. அதேநேரம் சில தொழிற்சாலைகளின் இயந்திரங்களை இயக்குபவர்களை பழக்குவதற்கு இந்தியாவிலிருந்தே ஆட்களை வரவழைக்கவேண்டியிருப்பதாகவும்...

30 வருடங்களுக்கு பின்னர் திறக்கப்பட்ட பலாலி – அச்சுவேலி பிரதான வீதி !

வடமாகாணத்தின் பலாலி – அச்சுவேலி பிரதான வீதி ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் பணிப்புரையின் பேரில் 30 வருடங்களுக்கு பின்னர் இன்று (நவம்பர் 01) திறந்து வைக்கப்பட்டது. பலாலி – அச்சுவேலி பிரதான வீதி 30 வருட உள்நாட்டு யுத்தத்தின் போதும் யுத்தம் முடிவடைந்து இன்னும் 15 வருடங்களுக்கும் மூடப்பட்டிருந்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த வீதியை...

யாழில் கணவனால் தீயிட்டு எரியூட்டப்பட்ட மனைவி..!

யாழ்ப்பாணம் - அச்சுவேலி பகுதியில் குடும்ப பிரச்சினை காரணமாக பெண் ஒருவர் தீயிட்டு எரியூட்டப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திருமணம் செய்து 10 வருடங்கள் கடந்த நிலையில் குடும்பத்தில் பிரச்சினை அடிக்கடி இடம் பெற்று வருவதாக தெரிவிக்கப்படும் நிலையில், கணவன் மது போதையில் வீட்டுக்கு வந்து மனைவியுடன் தகராறில் ஈடுபட்ட பின்னர் அறை ஒன்றுக்குள் பூட்டி வைத்து...
- Advertisement -spot_img

Latest News

இளம் தலைமுறை சிகரெட் கொள்வனவு செய்வதற்கு தடை விதித்த இங்கிலாந்து!

2008 ஆம் ஆண்டுக்கு பின்னர் பிறந்த அனைவரும் புகை பிடிப்பதை தடை செய்யும் வகையில் இங்கிலாந்தில் புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது. புகையிலையற்ற தலைமுறையை உருவாக்கும் நோக்கில் புகையிலை...
- Advertisement -spot_img