தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இன்று (24.07) காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மத்தலயிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த லொறி, முன்னால் சென்ற மற்றுமொரு லொறியுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
குறித்த விபத்தில் பின்னால் சென்ற லொறியின் சாரதி உதவியாளர் தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
மேலும் இது தொடர்பாக தெற்கு அதிவேக வீதியின் அங்குனுகொலபலஸ்ஸ சோதனைச் சாவடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.







