அயகம – எகல்ஓயா வீதியில் அயகம, கவரகிரிய பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூவர் காயமடைந்துள்ளனர்.
வேன் சாரதி உறங்கியதால் வேன் வீதியை விட்டு விலகி அருகிலிருந்த வீடொன்றின் சுவரில் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றள்ளது.
இந்த விபத்தின் போது வேனில் பயணித்த மூவர் காயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.








