Tuesday, June 9, 2026
No menu items!

வேன்

பண்டாரகம-கல்துடே பகுதியில் கோர விபத்து: 12 பேர் காயம்!

பண்டாரகம, வேவிட பிரதேசத்தில் வேன் ஒன்றும் டிப்பர் வாகனம் ஒன்றும் மற்றும் முச்சக்கரவண்டி ஒன்றும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்தொன்று ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 12 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஹொரணை வைத்தியசாலை சந்திக்கு அருகில் விபத்து; ஒருவர் பலி!

இன்று காலை 6 மணியளவில் ஹொரணை வைத்தியசாலை சந்திக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில், பெல்லபிட்டி பகுதியைச் சேர்ந்த 75 வயதுடைய ஒல்வின் இந்திரசிறி என்ற இரு பிள்ளைகளின் தந்தை உயிரிழந்தார். வேன் ஒன்றும் மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. மொரகஹேனவில் உள்ள தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற...

நுவரெலியா பயணித்த இளைஞர்கள் குழுவின் வேன் 70 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்து – எட்டு பேர் காயம்!

மாத்தறையிலிருந்து நுவரெலியாவுக்கு இளைஞர்கள் குழுவை ஏற்றிச் சென்ற வேன் ஒன்று, வீதியை விட்டு விலகி 70 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியது. வேனில் பயணித்த எட்டு பேர் பலத்த காயங்களுக்குள்ளாகி நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று வியாழக்கிழமை (10) அதிகாலை 5:00 மணியளவில் ஹட்டன் - நுவரெலியா...

பாடசாலை மாணவர்கள் சென்ற வேன் விபத்து! 14 பேர் காயம்!

குருவிட்ட பொலிஸ் பிரிவின் சயகந்த பகுதியில் இன்று (03) காலை ஒரு விபத்து நிகழ்ந்துள்ளது. எரட்டவிலிருந்து சயகந்த நோக்கி பயணித்த வேன் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து அருகிலுள்ள மரத்தில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்து நடந்த நேரத்தில், 11 முதல் 14 வயதுக்குட்பட்ட 14 பள்ளி குழந்தைகளும், ஒரு பெண்ணும் வேனில் பயணம் செய்தனர்....

ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் பயணித்த வாகனம் விபத்து;10 பேர் காயம்!

கந்தகெட்டிய பொலிஸ் பகுதியில் இன்று (17) ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் பயணித்த வேன் பேருந்துடன் நேருக்கு நேர் மோதியதில் 10 பேர் காயமடைந்துள்ளனர். காவல்துறையினரின் கூற்றுப்படி, கண்டகெட்டியவிலிருந்து பதுளை நோக்கிச் சென்ற பேருந்து, எதிர் திசையில் சென்ற வேன் மீது நேருக்கு நேர் மோதியது. இன்று அதிகாலை கண்டகெட்டிய - பதுளை பிரதான வீதியில் போபிட்டிய பகுதியில்...

வேன் ஒன்று தொடருந்துடன் மோதி விபத்து!

வெலிகம-பெலேன தொடருந்து கடவையில் இன்று (14) காலை வேன் ஒன்று தொடருந்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது . விபத்து ஏற்பட்ட நேரத்தில் வேனின் சாரதி மட்டுமே இருந்ததாகவும், அவர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும், வேனுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. விபத்து ஏற்பட்ட நேரத்தில் தொடருந்து கடவையில் நிறுவப்பட்ட எச்சரிக்கை மணி மற்றும் ஒளி சமிக்ஞை செயலிழந்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

மினுவாங்கொடவில் பாரிய விபத்து;பலர் காயம்!

கிரியுல்ல, மினுவாங்கொட வீதியில் பரவவில பிரதேசத்தில் இன்று (12ஆம் திகதி) காலை பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. கவனக்குறைவாக வாகனம் செலுத்தியமையினால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. கட்டுப்பாட்டை இழந்த காரொன்று எதிரே வந்த வேன் மீது மோதியுள்ளது. விபத்தில் பலர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பேருந்துடன் வேன் மோதி விபத்து – ஒருவர் பலி..!

ஹபரனையில் பஸ் ஒன்றுடன் வேன் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். திருகோணமலை - ஹபரன வீதியில் இன்று (01/02/2025) பஸ் ஒன்றுடன் வேன் மோதி ஏற்பட்ட விபத்தில் வேனின் சாரதி உயிரிழந்துள்ளதாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மின்சாரத் தூணுடன் மோதிய வேன் – சாரதிக்கு நேர்ந்த கதி..!

மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸ் பிரிவிலுள்ள பிள்ளையாரடி சர்வோதய வீதியில் வீதியைவிட்டு விலகிய வேன் மின்சார தூணுடன் மோதிய விபத்தில் மின்சார தூண் உடைந்து வீழ்ந்ததுடன் வேன் பலத்த சேதமடைந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (26/1/2025) இரவு இடம்பெற்றுள்ளதுடன் சாரதியை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த வீதியில் சம்பவதினமான நேற்று இரவு 8.00 மணிக்கு வேகமாக...

கோர விபத்தில் ஒன்றரை வயது குழந்தை பலி…!

பொலன்னறுவை - மஹியங்கனை வீதியில் லத்பந்துர சந்தியில் இடம்பெற்ற விபத்தில் ஒன்றரை வயது குழந்தையொன்று உயிரிழந்துள்ளது. பொலன்னறுவையில் இருந்து மஹியங்கனை நோக்கி பயணித்த வேனின் சாரதிக்கு  நித்திரை கலக்கம் ஏற்பட்டதால் வேன் வீதியை விட்டு விலகி எதிர்திசையில் வந்த முச்சக்கரவண்டியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்தில் படுகாயமடைந்த குழந்தை, அவரது சகோதரர், தாய்...
- Advertisement -spot_img

Latest News

காகிதத்தில் கோடீஸ்வரரான பெண்; போலி நாணயத்தாள்கள் மீட்பு

கொழும்பு,கொட்டிக்காவத்தையில் நடத்தப்பட்ட சோதனை ஒன்றின் போது, ​​700,000 அமெரிக்க டொலர் முகமதிப்புள்ள 60 கட்டு,போலி நாணயத்தாள்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். சம்பவம் தொடர்பில் 53 வயதான இலங்கைப் பெண்...
- Advertisement -spot_img