60 வயதுக்கு மேற்பட்ட சிரேஷ்ட பிரஜைகளின் நிலையான வைப்புத்தொகைக்கான வட்டி வீதத்தை 10% ஆக உயர்த்த அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
தற்போது இடம்பெற்று வரும் அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டுள்ள அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன இதனை தெரிவித்துள்ளார்.
அதன்படி, தற்போது காணப்படும் 8.5 % வட்டி வீதம் 10 % ஆக அதிகரிக்கப்படவுள்ளது.








