ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரை நாளை காலை அறிவிக்கவுள்ளதாக கட்சியின் செயலாளர் நாயகம் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது நெலும் மாவத்தையில் உள்ள பிரதான கட்சி காரியாலயத்தில் நடைபெறவுள்ள விசேட வைபவத்தில் அறிவிக்கப்படவுள்ளது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தனி வேட்பாளரை அறிவிக்க அக்கட்சியின் அரசியல் குழு அண்மையில் தீர்மானித்திருந்தது.
அந்தத் தீர்மானத்துடன், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு தமது ஆதரவைத் தெரிவிக்க கட்சியின் உறுப்பினர்கள் சிலர் தீர்மானித்துள்ளதுடன், அவ்வாறு ஜனாதிபதிக்கு ஆதரவளிக்க முன்வந்த உறுப்பினர்களின் தொகுதி அமைப்பாளர் பதவிகளை நீக்குவதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தற்போது நடவடிக்கை எடுத்துள்ளது.








