இந்த ஆண்டு  பிக் பாஸ் தமிழ் சீசன் 8 ஐ என்னால் தொகுத்து வழங்க முடியவில்லை என நடிகர் கமல்ஹாசன் தனது  ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

குறித்த ட்வீட்டர் பதிவில்,

7ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய எங்கள் பயணத்திலிருந்து ஒரு சிறிய இடைவெளி எடுக்கிறேன் என்பதை கனத்த இதயத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்

சினிமா கமிட்மென்ட் காரணமாக, பிக் பாஸ் தமிழ் சீசனின் வரவிருக்கும் சீசனை என்னால் தொகுத்து வழங்க முடியவில்லை.

உங்கள் இல்லங்களில் உங்களைச் சந்திக்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. உங்கள் அன்பையும் பாசத்தையும் நீங்கள் எனக்கு பொழிந்திருக்கிறீர்கள், அதற்கு நான் நன்றியுணர்வோடு இருக்கிறேன். பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியை இந்தியாவின் சிறந்த தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களில் ஒன்றாக மாற்றுவதற்கு போட்டியாளர்ளுக்கு நீங்கள் அளிக்கும்  உற்சாகமான மற்றும் உணர்ச்சிபூர்வமான ஆதரவே முக்கியமென நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here