இணையத்தில் பொருட்களை ஆர்டர் செய்து விற்பனையாளருக்கு பணம் செலுத்த மறுத்த இருவர் வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களிடம் இருந்து நான்கு கைத்தொலைபேசிகள், இரண்டு மடிக்கணினிகள் மற்றும் ஒரு ரவுட்டர் என்பனவும், இணைய விற்பனையாளர் மூலம் ஆர்டர் செய்யப்பட்ட தங்க நகைகள் மற்றும் இரண்டு கைக்கடிகாரங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
20 மற்றும் 24 வயதுடைய சந்தேகநபர்கள் வாரியபொல மற்றும் சுனந்தபுர பிரதேசங்களில் வசிக்கும் மாணவர்களாவர்.
ஆன்லைன் விற்பனையாளரின் புகாரின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டார்கள்.








