2022ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடிக்குப் பின், புதிய தனியார் நிறுவனங்கள் தமது பதிவுகளின் எண்ணிக்கையை ஆண்டுக்கு ஆண்டு கணிசமான அதிகரிப்பைப் பதிவு செய்து வருவதாக நிறுவன பதிவாளர் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ புள்ளிவிபர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டின் முதல் 6 மாத காலப்பகுதியில் 12,651 புதிய வணிக நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
2023ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் 10,520 புதிய நிறுவனங்களும் கடந்த ஜூன் மாதத்தில் மாத்திரம் 1,899 புதிய நிறுவனங்களும் பதிவு இடம்பெற்றுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொருளாதாரம் தொடர்ந்து மீண்டு வருவதால் தொழில்முனைவோர் மத்தியில் நம்பிக்கை ஏற்பட்டு வருவதாக அந்தத் தரவின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.







