2026 ஆம் ஆண்டுக்கான 5 ஆம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சை ஓகஸ்ட் 9 ஆம் திகதி நடைபெறும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே அறிவித்துள்ளார்.
ஊடக சந்திப்பில் பேசிய ஆணையாளர் நாயகம், திட்டமிட்டபடி பரீட்சையை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், 2026 ஆம் ஆண்டு மார்ச் 30 முதல் ஏப்ரல் 30 வரை பரீட்சைக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.







