மாலபே, கஹந்தோட்டை பிரதேசத்தில் உள்ள குடியிருப்பு ஒன்றில் நச்சு புகையை சுவாசித்த இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மொனராகலை மற்றும் கஹந்தோட்டை பிரதேசத்தில் வசிக்கும் 45 மற்றும் 63 வயதுடைய உயிரிழந்தவர் நேற்று (12) மாலை அவர்கள் கலக்க முயன்ற சில இரசாயனங்கள் நச்சு புகையை சுவாசித்ததால் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நச்சுப் புகையால் பாதிக்கப்பட்ட இருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாலபே பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here