யாழ்.போதனா வைத்தியசாலையில் இரண்டுதுண்டுகளாகத் துண்டிக்கப்பட்ட கை சத்திரசிகிச்சையின் பின்னர் வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டுள்ளது.

குறித்த தகவலை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தனது சமூகவலைத்தளப்பதிவில் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,

யாழ்.போதனா வைத்தியசாலையில் கடந்த மாதம் கை துண்டிக்கப்பட்ட நிலையில் இளைஞன் ஒருவர் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையிலேயே, நீண்ட மணிநேர சத்திர சிகிச்சையின் பின்னர் வெற்றிகரமாக மீண்டும் கை பொருத்தப்பட்டு இளைஞன் வீடு திரும்பியுள்ளார்.

குறிப்பிட்ட சத்திரசிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்ட வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள்அனைவருக்கும் வைத்தியசாலை சமூகம் சார்ந்த நன்றி என வைத்தியசாலைப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here