மோட்டார் சைக்கிளும் மற்றும் துவிச்சக்கர வண்டியும் மோதி விபத்துக்குள்ளானதில் 23 வயதுடைய  இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

வெல்லவாய மொனராகலை பிரதான வீதியில் புத்தல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெல்வத்த பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

காயமடைந்தவர்கள் புத்தல பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், ஆபத்தான நிலையில் உள்ள துவிச்சக்கர வண்டியில் பயணித்த இருவரும் மேலதிக சிகிச்சைக்காக மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பான விசாரணைகளை புத்தளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here