சர்வஜன அதிகாரத்தின் ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீரவின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் நாடு பூராகவும் 2000 கிராமங்களை உள்ளடக்கிய ‘வீட்டுக்கு வரும் நட்சத்திரம்’ தேர்தல் பிரச்சாரம் இன்று (24.08) ஆரம்பமாகியுள்ளது.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீர கருத்து தெரிவிக்கையில், பெருமளவான பணத்தை செலவழித்து பேரணிகளை நடத்துவதை விடுத்து கிராமத்திற்கு சென்று மக்களை சந்திப்பதே இதன்நோக்கமாகும் என தெரிவித்துள்ளார்.

“இன்று நாங்கள் ‘வீட்டுக்கு வரும் நட்சத்திரம்’ தொடங்கினோம், இன்று முதல் எங்கள் கொள்கைகளை உள்ளடக்கிய மூலோபாய திட்டம் உட்பட நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் துண்டுப் பிரசுரங்களை வழங்க பணியாற்றி வருகிறோம்.”

எங்களுடைய ‘வீட்டுக்கு வரும் நட்சத்திரம்’ நிகழ்ச்சியின் நோக்கம், நிறைய பணம் செலவழித்து கூட்டங்களை நடத்துவதை விட, மக்களுடன் சேர்ந்து கிராமத்திற்குச் சென்று, உண்மையில் கிராமத்து மக்களுடன் உரையாடலைத் தொடங்கி, சகோதரத்துவ அரசியலை நடைமுறைப்படுத்துவதே ஆகும்” என்றார்.

இந்த நிகழ்வில் சர்வஜன அதிகாரத்தின் செயற்குழு உறுப்பினர் அனுராதா யஹம்பத் மற்றும் பலர் கலந்துகொண்டிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here