தனது மூல திரிகோண ராசியான கும்ப ராசியில் பயணித்து வரும் சனி பகவான் இந்த ராசியில் 2025 மார்ச் வரை இருப்பார்.
2025 ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணத்துடன் சனி பெயர்ச்சி நிகழவுள்ளது.
இப்போது 2025 ஆம் ஆண்டில் நிகழும் சனி பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது என்பதைக் காண்போம்.
ரிஷபம்
2025 -ல் நிகழும் சனி பெயர்ச்சியால் ரிஷப ராசியின் 11 ஆவது வீட்டிற்கு சனி பகவான் செல்லவுள்ளார்.
இதனால் நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். அனைத்து துறைகளிலும் வெற்றி கிடைக்கும். கடின உழைப்புக்கான பலன் இந்த ஆண்டில் நிச்சயம் கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். பண பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
மிதுனம்
மிதுன ராசியின் 10 ஆவது வீட்டிற்கு சனி பகவான் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு 2025 ஆம் ஆண்டு முதலாக வாழ்க்கை அருமையாக இருக்கும். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்.
இதுவரை குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். நிதி நிலை வலுவாக இருக்கும். நீண்ட நாட்களாக இருந்த ஆசைகள் இந்த ஆண்டில் நிறைவேறும். சனியின் அருளால் எதிர்பாராத அளவில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள்.
கும்பம்
கும்ப ராசியின் 2 ஆவது வீட்டிற்கு சனி பகவான் செல்லவுள்ளார். இந்த ராசிக்காரர்களுக்கு ஏழரை சனியின் இரண்டாம் கட்டம் தொடங்குகிறது. இதனால் இந்த ராசிக்காரர்கள் உடல் மற்றும் மன ரீதியான பிரச்சனைகளில் இருந்து விடுபடுவார்கள்.
மேலும் பணம் தொடர்பான கவலைகளும் நீங்கும். குடும்பத்தினருக்கு நல்ல பொழுதைக் கழிப்பீர்கள்.
வெளிநாட்டில் வேலை செய்ய விரும்பினால், அதற்கான வாய்பபுக்கள் கிடைக்கும்.
உங்களின் முயற்சிகளுக்கு ஏற்ற வெற்றி கிடைக்கும். ஆனால் ஜூலை முதல் நவம்பர் வரை குடும்பத்தில் பிரச்சனைகளை சந்திக்கலாம். எனவே இந்த காலகட்டத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும்.





